Great Chanakya Quotes In Tamil
Great Chanakya Quotes In Tamil

Great Chanakya Quotes In Tamil

26-GREAT CHANAKYA BEST TAMIL QUOTES

7-CHANAKYA MOTIVATION TAMIL QUOTES

சாணக்யா தமிழ் பொன்மொழி
  • பயமும் தயக்கமும் உள்ளவனை, தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • அஞ்சு நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது.
  • கற்றவனின் பலம் அவன் கற்ற கல்வியை பொறுத்தது. வீரனின் பலம் அவன் படையை பொறுத்தது. வியாபாரியின் பலம் அவனின் பொருள்வளத்தை பொறுத்தது. அதுபோல உழைப்பாளியின் பலம் அவனின் உழைப்பை பொறுத்துள்ளது.
  • ஒருவன் தன் செயல்களினால் சிறப்படைகிறான், பிறப்பினால் அல்ல.
  • விதியை நம்பிக்கொண்டே இருப்பவன், எதையும் செய்ய மாட்டான்
  • கடுமையாக உழைப்பவனுக்கு, கவலைப்பட நேரம் இருக்காது.
  • சந்தேகத்துடன் தொடங்கும் காரியம் சங்கடத்திலேயே முடியும்.

11-CHANAKYA GREAT LIFE THOUGHTS IN TAMIL

  • நாவிலே பட்டத் தேனையோ நஞ்சையோ சுவைக்காமல், இருப்பது கடினம். அதைப்போல்  ஆள்பவனுடைய செல்வத்தை கையாளும் பணியில் ஈடுபட்டிருப்பவன், ஒரு சிறிதளவேணும் எடுப்பதினின்று தடுக்க முடியாது.
  • உங்கள் பலவீனத்தை குறிவைப்பவன், உங்கள் நண்பன் அல்ல நண்பன் என்னும் போர்வையில் இருக்கும் எதிரியே.
  • இழந்த செல்வம், நேர்ந்த அவமானம், கெட்ட வசைச் சொல், விவேகம் உள்ள மனிதன் வெளியே சொல்ல மாட்டான்.
  • மௌனமாக பேசுபவர்களுக்கு, விரோதிகள் இல்லை.
  • ஒருவருடைய நடத்தை தான், நண்பர்களையும் விரோதிகளையும் உருவாக்குகிறது.
  • எதற்கெடுத்தாலும் காரணம் தேடிக்கொண்டே இருந்தால், ஒரு போதும் தலைவன் ஆக முடியாது.
  • அறிவு உள்ளவனுக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். சந்தேகம் ஆராய்ச்சியை தூண்டும், ஆராய்ச்சி புதிய புதிய அறிவை தந்து கொண்டே இருக்கும். கிடைத்த புதிய அறிவு மீண்டும் சந்தேகத்தைத் தூண்டி, மேலும் ஆராயத்தூண்டும்.
  • மிகப்பெரிய குரு மந்திரம், உன் ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதே, அது உன்னை அழித்துவிடும். நீயே காப்பாற்ற முடியாத உன் ரகசியத்தை, மற்றவர்கள் சொல்லாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதே.
  • நேருக்கு நேர் இனிமையாகப் பேசிவிட்டு, அவர் இல்லாத போது புறம் பேசும் மனிதர்களை, தவிர்த்து விடுங்கள். அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது, பசும்பாலில் கடும் விஷத்தைக் கலந்து பருகுவதற்கு ஒப்பாகும்.
  • எல்லாவிதமான நட்புக்களின் பின்னாலும், ஒருவரது சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்பது இல்லை, இது ஒரு கசப்பான உண்மை.
  • வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை, நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும், அதன் கசப்புத் தன்மை மாறாது. அதுபோல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும், அறிவு வராது.

8-POSITIVE CHANAKYA QUOTES IN TAMIL

  • கடின உழைப்பு உள்ளவனை ஏழ்மை தீண்டாது. கடவுளை ஒருபோதும் மறவாதவனை தீவினை தீண்டாது. அமைதியான மனம் உடையவரை, சச்சரவு தீண்டாது. அதுபோல விழிப்புணர்வோடு இருப்பவனை பயம் தீண்டாது.
  • இந்த உலகத்தில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது. வேதனையும் வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை மட்டுமே, அனுபவித்தவனும் கிடையாது. இதுவே உலகத்தின் இயல்பு நிலை என்று அறிந்து வாழக் கற்றுக்கொள்.
  • மற்றவர்களின் தவறுகளில்லிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். எல்லா தவறுகளையும் நீங்களே செய்து கற்றுக்கொள்ள உங்கள் வாழ்நாள் போதாது.
  • எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு, பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் உலகம் அறிவாளி, பண்டிதன், என்று உலகம் போற்றுகிறது.
  • ஒரு காரியத்தை துவங்கிய பின், அதில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சி, அக்காரியத்தை விட்டுவிட வேண்டாம். நேர்மையாக உழைப்பவர், நிச்சயமாக மகிழ்ச்சி அடைவார்.
  • மலர்களின் வாசம், காற்று வீசும் திசையில் மட்டுமே போகும். ஆனால் ஒருவர் செய்யும் தர்மம், நாலாதிசையிலும் செல்லும்.
  • ஒருவன் தன்னுடைய கஷ்டகாலத்திற்கு, தேவையான பணத்தை, முன்பே காக்க வேண்டும்.
  • ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன், ஆகியவர்களுடன் வாழ்வது, ஒரு கொடிய நச்சுப் பாம்புடன் வாழ்வதற்கு சமம்.

படித்ததில் பிடித்தவை

“வெற்றி என்பது ஒரு தந்திரச் செயலும் அல்ல, புரியாத புதிரோ அல்ல, அடிப்படைத் தன்மைகளை முறையாகவும் இடைவிடாமலும் பின்பற்றுவதன் விளைவாக, இயற்கையாகவே வெற்றியை அடைய முடியும்”.

இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

நன்றி.

What’s your Reaction?
+1
10
+1
44
+1
9
+1
0
+1
3
+1
1
Spread the love

One comment

  1. Simply wish to say your article is as astonishing. The clarity in your post is
    siply nice and that i could thijk you’re a professional on this subject.
    Well along with your permission let me to clutch
    your RSS feed to stay up to date with impending post.

    Thank you 1,000,000 and please keep up the
    grarifying work.

    Have a loook at my homepage :: youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *