நீங்கள் விட்டுவிடவில்லை என்றால் உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.
நீங்கள் 21ஆம் நூற்றாண்டில் வெற்றி பெற விரும்பினால்,நீங்க மற்றவர்களை மேம்படுத்த வேண்டும், மற்றவர்கள் உங்களை விட சிறந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
சிறந்த நபர்களைக் காட்டிலும் சரியான நபர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
முட்டாள்கள் மட்டுமே பேச வாயைப் பயன்படுத்திகிறார்கள் ஒரு புத்திசாலி மனிதன் தனது மூளையைப் பயன்படுத்துகிறான் ,ஒரு புத்திசாலி தன் இதயத்தைப் பயன்படுத்துகிறன்.
நீங்கள் சிறியவராக இருக்கும் போது,நீங்கள் மிகவும் கவனம் செலுத்தி உங்கள் முலையை நம்பியிருக்க வேண்டும்,உங்கள் வலிமை அல்ல.
நீங்கள் அனைவரையும் உங்கள் எதிரிகளாக பார்த்தால்,உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் எதிரிகளாக இருப்பார்கள்.
நீங்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றால்,ஏதேனும் வாய்ப்பு அதில் இருக்குமானால் உங்களுக்கு எப்போது தெரியும் எப்படி தெரியும்.
Jack ma
குள்ளமான உயரம் மெலிந்த உடல் கொண்டவர், தனது உள்ளம் மட்டும் முயற்சி செய்வதில் வலிமை கொண்ட மனிதன். தனது எட்டு வயதில் பல கிலோமீட்டர்கள் தாண்டி காலையில் சீக்கிரமாக தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆசையில் இலவச டூரிஸ்ட் கைடாக, அவர் நாட்டுக்கு வரும் சுற்றுலா காரர்களுக்கு கைடாக வேலை செய்தார்.
சிறந்த கல்லூரியில் படித்தால் தான், சிறந்த வேலை கிடைக்கும். சிறந்த வேலை கிடைத்தால் தான் நம் பணம் கஷ்டம் தீரும் என்று பத்து முறை அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அவர் பத்து முறையும் நிராகரிக்கப்பட்டார். தன் நாட்டில் உள்ள பெரிய எல்லா கல்லூரிகளிலும் அவர் விண்ணப்பித்தார். கிட்டத்தட்ட நூறு கல்லூரிகளிலும் நிராகரிக்கப் பட்டார். பின்னர் அவர் ஊரிலேயே ஒரு சிறு கல்லூரியில் சேர்ந்து ஆங்கில பட்ட பிரிவை படிக்கத் தொடங்கினார், படித்து முடித்தவுடன் நம் வாழ்க்கை மாறப்போகிறது என்று நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் படித்து முடித்தவுடன் அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை குடும்ப கஷ்டம் அதிகமான அழுத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது. அவர் ஏதோ ஒரு வேலைக்கு (போய்) ஆகவேண்டும் என்ற சூழல் அவரை தள்ளியது. இதையடுத்து போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார் மொத்தம் 5 பேர் .நான்கு பேர் தேர்ச்சியானர்கள், ஒருத்தர் மட்டும் தேர்ச்சி ஆகவில்லை அவர் நம் ஜாக் மா. அவர்கள் நாட்டில் புதிதாக (கேஎ அக்ப்சி) அப்போதுதான் திறக்கப்பட்டது, இதற்கு அதிகமானோர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு அவர் காதுக்கு எட்டியது, இதையடுத்து எப்படியாவது எனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாக இருந்தது, அதற்கு விண்ணப்பித்தார். அதில் மொத்தம் இருபத்தி ஐந்து பேர் அவருடன் சேர்ந்து விண்ணப்பித்தனர். அதில் 24 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள், அந்த நிராகரிக்கப்பட்ட ஒரு மனிதன் ஜாக் மா. அந்தநேரத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்றார் ஜாக் மா. வேகமாக சென்று அந்த நிர்வாகிகளிடம் என்னை ஏன் நிராகரித்தார்கள் என்று கேட்டார் .அதற்கு, நீ குள்ளமாகவும் மெலிந்த உடல் கொண்டவனாக ஆகவும் இருக்கிறாய், எங்களது வாடிக்கையாளர்கள் முன்பு உன்னை நிறுத்துவதற்கு எங்களுக்கு ஈடுபாடு இல்லை என்றதும், மிகவும் மனமுடைந்து போனார். தனது உருவத்தை அடையாளமாக கொண்டு தனக்கு வேலை கொடுக்காத அந்த சீன மக்களுக்கு இடையே அந்த நாட்டின் அடையாளமாகவே மாறினார், பிற்காலத்தில் ஜாக் மா. அலிபாபா என்கிற இணையதளம் மூலமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றி அமைத்தார். MADE IN CHINA என்ற பதிக்கப்பட்ட பொருள்கள் உலகமெங்கும் இருப்பதற்கு ஜக்கம்மா மிக முக்கியமான காரணம். சீனா நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு காரணம் அந்த ஒரு தனி மனிதன் ஜாக் மா தான். இந்த அனுபவங்களை கொண்டு ஒரு மனிதன் எழுதிய வரிகளை தான்
NAME : JACK MA
BORN : 10 SEPTEMBER 1964
EDUCATION : HANGZHOU NORMAL UNIVERSITY ( BA)
KNOW FOR : CO-FOUNDER AND FORMER EXECUTIVE CHAIRMAN OF ALIBABA GROUP.
OCCUPATION : BUSINESS MAGNATE,INVESTOR.
OCTOBER 2021: NET WORTH : $42.3BILLION,
OCTOBER 2021 : FOURTH WEALTHIEST PERSON IN CHINA.
POLITICAL PARTY : COMMUNIST PARTY OF CHINA.
CHILDREN : 3
படித்ததில் பிடித்தவை
வாழ்வில் வெவ்வேறு அனுபவமும் உங்களுடைய சுயபிம்பத்தை மாற்றுகிறது. ஆனால் நீங்கள் ஒரு கால்பந்தை ஒரு முறை எட்டி உதைத்ததால் நீங்கள் உங்களை ஒரு கால்பந்து வீரராகக் கருத மாட்டீர்கள். அதேபோல, கையில் கிடைத்த ஒரு தாளில் நீங்கள் ஒரு படத்தைக் கிறுக்கியதால் நீங்கள் உங்களை ஓர் ஓவியராகக் கருத மாட்டீர்கள். ஆனால் நீங்கள் இச்செயல்களை மீண்டும் மீண்டும் செய்யும்போது, ஆதாரம் அதிகரிக்கிறது, ஆதனால் உங்களுடைய சுயபிம்பமும் மாறத் தொடங்குகிறது.
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.இந்த வரிகள் படிக்கும்போது, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே கொடுக்கப்பட்டுள்ள, உணர்வுகளை வெளிப்படுத்தும் BUTTON மூலமும், COMMENTS மூலமும், வெளிப்படுத்தலாம்.நன்றி