39-GREAT BUDDHA QUOTES IN TAMIL
39-GREAT BUDDHA QUOTES IN TAMIL

39-GREAT BUDDHA QUOTES IN TAMIL

புத்தரின் சிறந்த தமிழ் பொன்மொழிகள்.

புத்தரின் இந்த வரிகள் எல்லாம், நம் உள்ளத்திற்கும், நம் வாழ்க்கைக்கும், மிகவும் நம்பிக்கை தரக்கடியதாகவும், நம் சிந்தனைகளிலும், நம் வாழ்க்கையிலும், புதிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

5- Patient Thoughts of Buddha Quotes In Tamil.

buddha quotes in tamil
  • தோல்வியே அடையாத ஆயுதம்? பொறுமை.
  • அமைதியை உங்களிடம் தேடுங்கள், பிறரிடம் தேடாதீர்கள்.
  • அமைதியாக இருப்பவன் முட்டாள் என்று எண்ணி வடாதே. பேசுபவனை விட, கேட்பவனே புத்திசாலி.
  • பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது, பொறுமை தான்.
  • தவறான பாதையில் வேகமாக செல்வதை விட, சரியான பாதையில் மெதுவாக செல். எதற்கும் அவசரப்பட வேண்டாம். நேரம் வரும்போது அது நடக்கும்.

5-Reality Thoughts Of Buddha Quotes In Tamil.

  • செல்வமும், அதிகாரமும் நிலையானதல்ல. ஒருவரிடமே குவிந்திருப்பதல்ல.
  • நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதை, தடுக்க முடியாது. இன்றைய பொழுதில், இக்கணம் வாழுங்கள், அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு.
  • இங்கே ஆள்பவன் இருக்கும் போதே, அதை ஆள வேண்டிய இன்னொருவன் உருவாகிறான்.
  • எதுவுமே நிரந்தரம் இல்லை. உங்களை அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள், ஏனென்றால் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை இருந்தாலும், அது மாறும்.
  • எப்போதுமே தவறான மனிதர்களால், சரியான பாடங்களை, வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

8-Understand Yourself Buddha In Tamil.

  • போரில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வதைவிட, உன் மனதை வெற்றி கொள்வதே, சிறந்த வீரம்.
  • எல்லாவற்றிலும் நல்லதைக் காண, உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவும்.
  • எல்லாமே ஒரு காரணத்திற்காக நடக்கிறது. அதை கேள்வி கேட்காதீர்கள், அதை நம்புங்கள்.
  • உங்கள் வாழ்க்கையின் நோக்கம், உங்கள் நோக்கத்தைக் கண்டுபிடிப்பது. உங்கள் முழு மனதையும் கொடுத்து, அதைப் பெற வேண்டும்.
  • துன்பங்கள் உங்களை பிடிக்கவில்லை. நீங்கள்தான், துன்பத்தை பிடித்திருக்கிறார்கள்.
  • மற்றவர்களின் தவறுகளை பார்ப்பது எளிது. உங்கள் தவறுகளை பார்ப்பது தான் கடினம்.
  • நீங்கள் உங்களை உண்மையாக நேசித்தால், மற்றவரை ஒருபோதும் காயப்படுத்த முடியாது.
  • நீங்கள் பாதையாக மாறும் வரை, நீங்கள் பாதையில் பயணிக்க முடியாது.

8-Happiness Buddha Quotes In Tamil.

  • மகிழ்ச்சியான மக்கள், தங்கள் உள் உலகத்தை, உருவாக்குகிறார்கள். மகிழ்ச்சியற்ற அவர்கள், தங்கள் வெளி உலகத்தை, குற்றம்சட்டுகிறார்கள்.
  • மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு வழி. சூழ்நிலைகளை மாற்றுவது. அல்லது உங்கள் மனநிலையை மாற்றுவது.
  • மற்றவர்களின் நடத்தையால், உங்கள்  உள் அமைதியை, அழிக்க விடாதீர்கள்.
  • உங்கள் மனதை ஆளுங்கள். அல்லது அது உங்களை ஆளும்.
  • ஏற்கனவே உள்ளதைப் பாராட்டத் தவறியவர்களுக்கு, மகிழ்ச்சி ஒருபோதும் வராது.
  • எதிர்மறை மக்களிடமிருந்து, விலகி இருங்கள். ஒவ்வொரு தீர்வுக்கும் அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது.
  • ஆரோக்கியம் மிகப்பெரிய பரிசு. மனநிறைவே மிகப்பெரிய செல்வம்.
  • மௌனம் மற்றும் புன்னகை, இரண்டும் சக்திவாய்ந்த வார்த்தைகள். புன்னகை பல பிரச்சனகளை தீர்க்கும் வழி. மற்றும் மௌனம் பல பிரச்சினைகளை தவிர்க்கும் வழி.

7-Life Thoughts Buddha Quotes In TAMIL.

  • ஒவ்வொரு மாற்றத்திற்கும் காரணம் உண்டு. காரணமின்றி விளைவில்லை.
  • கோபம் என்பது, பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.
  • நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்த நிலை நமக்கு அளித்தது, நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலை நம் எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
  • காயங்களோடு சிரிப்பது எளிதல்ல, அப்படி சிரிக்கத் தொடங்கிவிட்டாள், எந்த காயமும் பெரிதல்ல!
  • கூர்மையான வாள்? கோபத்தில் கூறப்படும் வார்த்தை.
  • சோம்பலும் சோறும் கொண்டு, நூறு ஆண்டு வாழ்வதை விட. ஒருநாள் பெரு முயற்சியோடு வாழ்வது, மேலானது.
  • ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு. கொஞ்சம் அறிவு உண்டு. ஆனால் எல்லாம் தெரியும் என்று நினைப்பவன், முழு மூடன்.

3-About Truth & Honest Buddha Quotes in Tamil.

  • நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாத விஷயங்கள். பேரொளியைக் கொண்ட சூரியன், சந்திரன், மற்றும் பேரழகு கொண்ட உண்மை.
  • மற்றவர்களைப் பற்றி நன்றாகப் பேசுங்கள், அவர்களின் தவறுகளை பற்றி அல்ல.
  • நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவானவர்களிடமிருந்து, அதை எதிர்பார்க்க வேண்டாம்.

புத்தரின் பொறுமை.

புத்தர் ஒரு முட்டாள். தியானம் என்று சொல்லி பல மாதங்களின் பொன்னான நேரத்தை, வீணடித்து கொண்டிருக்கிறார், என் இரு மகனையும் வேலை செய்யும் நோக்கத்தை விட்டு, தியானத்தின் மீது அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று, புத்தர் மீது அதிக கோபம் கொண்ட ஒரு மனிதர்.

ஒருநாள் புத்தர் ஒரு கிராமத்திற்கு நடுவில் கிராமத்தில் உள்ள எல்லா மக்களும் புத்தரின் சீடர்களும் புத்தரை சூழ்ந்து கொண்டிருந்த ஒரு நேரத்தில் . புத்தரிடம் அந்த மனிதன் வந்தான் அமைதியாக அவர் முன்பு உட்கார்ந்தார் அவர் மீது அளவு கடந்த கோபம் கொண்டிருந்த அந்த மனிதன் சட்டென்று புத்தரின் மீது எச்சிலைத் துப்பி விட்டார் ஆனால் புத்தரோ அந்த மனிதனைப் பார்த்து அழகிய புன்னகையை புன்னகைத்தார். அந்த மனிதன் இன்னும் இங்கு இருந்தால் அவரை அடித்து விடுவோம் என்று எண்ணி அங்கிருந்து கிளம்பி விட்டார் அங்கிருந்த சீடர்களும் அந்த கிராம மக்களும் கோபத்துடன் இருந்தாலும் புத்தரின் அந்த அமைதியும் அந்த புன்னகையும் கண்டவர்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு எதுவும் செய்யாமல் விட்டு விட்டார்கள்.

அன்றிரவு அந்த மனிதனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எச்சில் ஒரு மனிதனின் முகத்தில் துப்பிய பிறகும் எந்த ஒரு சலனமும் இல்லாத அவரிடம் இருந்து வெளிப்பட்ட அந்த அழகிய புன்னகை அவருக்கு தூக்கத்தை கொடுக்கவில்லை. மறுநாள் காலையில் எல்லோரும் சுற்றி இருக்கும் நேரத்தில் அந்த மனிதன் வந்து புத்தரிடம் மன்னிப்பு கேட்டார் அதற்கு புத்தரோ ஏன் என்னிடம் மன்னிப்பு கேட்கிறாய் என்றார் நேற்று இதே நேரத்தில் இவர்கள் எல்லோரும் முன்பும் உங்களை நான் துப்பினேன் அதற்காக என்றார் அதற்கு புத்தரோ நான் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்வதில்லை எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறேன் இப்போது என் முன்பு ஒரு தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனப்பாங்கு கொண்ட ஒரு உயர்ந்த மனிதர் முன்பு உட்கார்ந்து இருக்கிறேன் என்றார்.

அந்த நிகழ்வு புத்தரின் மனநிலையை எள்ளளவும் பாதிக்கவில்லை அந்த மனிதனின் உள்ளத்திலும் புத்தரை பார்க்கும்போதெல்லாம் நம் இப்படி செய்து விட்டோமே என்று எண்ணம் அவருக்கும் வராத அளவுக்கு ஒரு அழகான உண்மையை அழகான விதத்தில் அவருக்கு உணர்த்தினார் புத்தர்.

இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி.

NAME : GAUTAMA BUDDHA.

BORN : 563 BCE OR 480 BCE PLACE : LUMBINI

DIED : 483 BCE OR 400 BCE AGE @ 80.

WIFE : YASHODHARA.

CHILDREN : RAHULA.

PARENTS : SUDDHODANA.FATHER

                  : MAYA DEVI MOTHER

Related Post

What’s your Reaction?
+1
15
+1
7
+1
3
+1
0
+1
0
+1
0
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *