25-THE GREAT MUHAMMAD NABI QUOTES IN TAMIL
25-THE GREAT MUHAMMAD NABI QUOTES IN TAMIL

25-THE GREAT MUHAMMAD NABI QUOTES IN TAMIL

3-PATIENCE MUHAMMAD NABI QUOTES IN TAMIL

  • நிலை குலையாத பொறுமை யாளர்களை, இறைவன் நேசிக்கிறான்.
Muhammad nabi Tamil quotes image
  • யாராவது உன்னிடம் உள்ள, குறைகளை சொல்லி திட்டினால். நீ அவனுடைய குறைகளை சொல்லி, திட்டாதே.
  • நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் சாத்தானின் தன்மையாகும்.

6-GREAT HUMANITY MUHAMMAD QUOTES IN TAMIL

  • யார் மக்களுக்கு, கருணை காட்டுவது இல்லையோ, அவருக்கு, இறைவனும் கருணை காட்டுவதில்லை.
  • தர்மம் செய்வதில், தீவிரமாக இருங்கள், ஏனெனில் தர்மத்தை தாண்டிக்கண்டு, துன்பங்கள் உங்களை வந்து அணுகாது.
  • யாசகம் கேட்பவரை, ஒருபோதும் வீரட்டாதீர்கள்.
  • உங்கள் வீடுகளில், இறைவனுக்கு மிக விருப்பமானது. அனாதைகளை அரவணைக்கும் வீடு ஆகும்.
  • மண்ணில்லுள்ள மனிதர்களை, நீங்கள் நேசித்தால், விண்ணிலுள்ள இறைவன், உங்களை நேசிப்பான்.
  • தானதர்மங்கள் செய்வதினால், செல்வம் குறைவதில்லை.

2-POSITIVE MUHAMMAD NABI QUOTES IN TAMIL

  • செயல்கள் அனைத்தும், எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன, மேலும் ஒரு மனிதன் எதனை எண்ணுகிறான், அதுவே அவனுக்கு உரியதாகும்.
  • யார் ஒருவர், இறைவனுக்கு அஞ்சி நடக்கிறாரோ, அவருக்கு ஒவ்வொரு சங்கடத்தில் இருந்து, வெளியேறும் வழியை, அவன் உருவாக்குவான்.

6-WAY OF PARADISE MUHAMMAD NABI QUOTES IN TAMIL

  • இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன், எனவே எவருடைய பரிந்துரையின்றி, அவனை நேராக நெருங்க முடியும், அவனிடம் உதவி கேட்கவும் முடியும்.
  • மனிதன் தன்னுடைய நண்பனின் வழி எதுவோ, அதில் தான் இருப்பான். எனவே நட்பு கொள்ளும் முன், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதை கவனித்து, நட்பு கொள்ளுதல் வேண்டும்.
  • தாயின் காலடியில், சொர்க்கம் இருக்கிறது.
  • ஒருவரது உள்ளத்தில், அணுவளவு கர்வமும் அகந்தையும் இருக்குமானல், அவர் சுவனத்தில், நுழைய மாட்டார்.
  • இறை நம்பிக்கை கொண்டவர்களே, பன்மடங்கு பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
  • உங்களுக்கு விரும்புவதை, பிறருக்கும் விரும்பாதவரையில், நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆகமுடியாது.

8-GREAT THOUGHTS FROM MUHAMMAD NABI QUOTES IN TAMIL

  • உங்களில் ஒருவன் தீய செயல்களை கண்டால், தனது கையால் அதனை தடுக்கட்டும், அதற்கு இயலவில்லை எனில் தனது நாவால் கலையட்டும், அதற்கும் இயலவில்லை எனில் தனது மனதால் அதை வெறுகட்டும். இதுவே இறை விசுவாசத்தின், கடைசி நிலை.
  • உண்ணுங்கள், பருகுங்கள், அணியுங்கள், மேலும் தர்மம் செய்யுங்கள், அதில் பெருமை வீண்விரயம் கலந்துவிடாமல், இருக்கும்வரை
  • திண்ணமாக இறைவன், உங்களுடைய தோற்றங்களையும் செல்வங்களையும் பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும், கவனிக்கிறான்.
  • உனது மனைவிக்கு, நீ ஒரு வாய் உணவு அன்போடு ஊட்டுவதற்கும், இறைவனிடத்தில் நன்மை உண்டு.
  • நல்லெண்ணம் கொள்வது, இறைவழிபாட்டின் ஒரு அங்கமே ஆகும்.
  • பெண்களிடம், நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
  • இறைவனே ஒவ்வொரு பொருளையும் படைத்த பிறகு, அவை ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு, விதியை உருவாக்கினான்.
  • ஒரு வினாடி, நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விட, சிறந்தது.

படித்ததில் பிடித்தவை

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துரத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால், அவளை மணப்பார். எனவே ஒருவரின் ஹிஜ்ரத் (துரத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ, அதுவாகவே அமையும் என்று இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள், கூறினார்கள் என உமர் இப்னு கத்தாப் (ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். (புகாரி, வசனம்: 1)

Related Post

இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் இந்த வரிகள் படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும் கமெண்ட் பாக்ஸிலும், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி.

What’s your Reaction?
+1
12
+1
27
+1
18
+1
1
+1
2
+1
0
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *