19-HENRY FORD QUOTES IN TAMIL.
19-HENRY FORD QUOTES IN TAMIL.

19-HENRY FORD QUOTES IN TAMIL.

இந்தப்பதிவில் சிறந்த மனிதன் ஹென்றி ஃபோர்ட் வரிகளைத்தான், பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக இவர் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான, ஆர்வம் ஊட்டக்கூடிய, சிறுசிறு சம்பவங்களை பார்த்துவிட்டு, அவர்களுடைய வரிகளுக்குள் போய்விடலாம். இந்த சிறுசறு சம்பவங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில், உங்களுக்காக இதில் நான் தொகுத்துள்ளேன்.

கார் காலத்தை உருவாக்கிய மனிதன்.
நகரும் பொருட்கள் மீது, அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடமிருந்து, அவருக்கு ஓடாத ஒரு கடிகாரம் கிடைத்தது, அதை வாங்கிக்கொண்ட ஹென்றி ஃபோர்ட் அதைப் பிரித்துப் பார்த்து சரி செய்தும் விட்டார். அந்த ஊர் மக்கள் எல்லோரும் வீட்டிலிருந்த ஓடாத கடிகாரத்தை கொண்டு வந்து கொடுத்து   ஹென்றி ஃபோர்ட் இடம் சரி செய்து வாங்கிக் கொண்டனர். அதை இலவசமாகவே செய்தார், ஏனென்றால் அதை செய்வதில் அவருக்கு சந்தோஷம் இருந்தது.

பெட்ரோல் வாகனம் ஒரு கனவு.

பெட்ரோல் வாகனம் தயாரிப்பது அவருடைய மிகப் பெரிய கனவாக இருந்தது. ஒருநாள் அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் பெட்ரோல் வண்டியை தயாரிக்க தொடங்கினார். பல தோல்விகளும், பல முயற்சிகளையும், பல மாதங்கள், கடந்து அதை வெற்றிகரமாக உருவாக்கினார். உருவாக்கிய பிறகு தான் அவருக்கு தெரிந்தது, அந்த வாகனம் வெளியே வரும் வழி, மிகச் சிறியதாக இருந்தது. அந்த வண்டியை ஆன் செய்தபறகு, அதில் ஏற்பட்ட சத்தம் அதை ஒட்டியே பார்க்க வேண்டுமென்று ஆர்வத்தை அவருக்கு அதிகமாக, தூண்டியது. அந்த வாசலை ஒரு கோடாரியை கொண்டு, வெட்டி எடுத்து அந்த வண்டியில் வேகமாக வெளியே ஓட்டிக் கொண்டு சென்றார். மிக சத்தமாக ஓடிய அந்த வண்டியை ஊர் மக்கள் அனைவரும் வியப்பாக பார்த்தனர்.

வேலை செய்யும் ஊழியர்கள் மீதும் வாடிக்கையாளர்கள் மீதும் இவர் வைத்திருந்த கவனம்.

ஒவ்வொரு முதலாளிகளும் பணம் என்பது தான் வியாபாரம் என்று இருந்த காலகட்டத்தில் சாமானிய மக்களால் வாங்கக் கூடிய அளவிற்கு தன் வாகனத்தின் விலையின் மீதும் தரத்தின் மீதும் மிக கவனம் செலுத்தினார்.

இதனால் பன்மடங்கு கார் உற்பத்தி பெருக தொடங்கியது,வாகனத்தை அதிக அளவு உற்பத்தி செய்வதற்கு அவர் கண்டுபிடித்த ஒரு யுத்தி தான் அசெம்பிளி லைன் இன்றளவும் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் இந்த முறையைத்தான் கையாளுகிறார்கள் இந்த முறையைக் கையாண்ட உடன் உற்பத்தி பன்மடங்கு ஆனது அது மட்டுமில்லாமல் தன் ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் இனி என் கம்பெனியில் வேலை செய்யும் எல்லா நபர்களுக்கும் இரண்டு மடங்காக சம்பள உயர்வு அதிகமாக போகிறது என்றார் அதாவது அக்காலகட்டத்தில் 9 மணி நேரம் வேலை செய்தால் 2.34$ இருந்த சம்பளம் 5$ஆக ஆனது அதுமட்டுமில்லை வேலை செய்யும் நேரத்தை 9 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக ஆக்கினார். இந்த செய்தி அந்த நாடு முழுவதும் பத்திரிகைகளிலும் செல்வந்தர்களம் கேலி செய்யப்பட்டது இருந்தாலும் அங்கு வேலை செய்து இருந்த மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள் இந்த சந்தோஷத்தின் விளைவு அந்த கம்பெனியின் உற்பத்தி முன்பு செய்ததைவிட நான்கு மடங்கு அதிகமாக உற்பத்தி ஆனது இந்த அறிக்கை வெளியே வந்ததும் நகைத்தவர்கள் எல்லாம் நகம் கடிக்க உள்ளானார்கள்.

4-Inspiration Henry Ford Tamil Quotes.
  • தோல்வி என்பது மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பாகும், இந்த முறை மிகவும் புத்திசாலித்தனமாக.
henry ford quotes in tamil
  • ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்று நினைத்தாலும் அல்லது ஒரு காரியத்தைச் செய்யமுடியாது என்று நினைத்தாலும் நீங்கள் சொல்வது சரிதான்.
  • மற்றவர்கள் வீணடிக்கும் நேரத்தில் பெரும்பாலான மக்கள் முன்னேறுகிறார்கள் என்பது எனது பார்வை.
  • பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை அதிகமான சிறிய சிக்கல்கள் மட்டுமே உள்ளன.
7-Success Thoughts of Henry Ford Tamil Quotes.
  • உங்கள் இலக்கை விட்டு உங்கள் கண்களை எடுக்கும்போது நான் ஏன் எடுத்தேன் என்று நீங்கள் பார்த்தால் தெரிவது உங்கள் தடைகள் தான்.
  • ஒரு தவறு கூட ஒரு பயனுள்ள சாதனைக்கு அவசியமான ஒன்றாகும்.
  • பெரும்பாலான மக்கள் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பதை விட அதிக நேரத்தையும் சக்தியையும் வேறு ஏதோ ஒன்றில் செலவிடுகிறார்கள்.
  • தவறு கண்டுபிடிக்க வேண்டாம் ஒரு தீர்வைக் கண்டறியவும்.
  • தரம் என்றால் யாரும் பார்க்காத ஒன்றை சரியாகச் செய்வது .
  • ஒரு லட்சியவாதி என்பது மற்றவர்களை வளமாக இருக்க உதவும் ஒரு நபர்.
  • நீ எதை செய்வதற்கு முன்பும் உன்னை நீயே தயார் செய்து கொள்வது வெற்றியின் ரகசியம்.
8-Thoughts of Henry Ford Tamil Quotes.
  • அடுத்த ஆண்டு உலகம் என்ன செய்யப் போகிறது என்பதை நீங்கள் பள்ளியில் கற்றுக்கொள்ள முடியாது.
  • ஒரு மனிதன் செய்யும் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று அவனது பெரிய ஆச்சரியங்களில் ஒன்று தன்னால் செய்ய முடியாது என்று பயந்ததை அவன் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிப்பது.
  • உங்களிடம் எது இருந்தாலும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் அல்லது அதை இழக்க வேண்டும்.
  • கூலி கொடுப்பது முதலாளி அல்ல முதலாளிகள் பணத்தை மட்டுமே கையாளுகிறார்கள் வாடிக்கையாளர் தான் கூலி கொடுக்கிறார்கள்.
  • நம் வாழ்க்கையில் முன்னேறும் போது நம் திறன்களின் வரம்புகளைக் கற்றுக் கொள்கிறோம்.
  • நீங்கள் பயப்பட வேண்டிய போட்டியாளர் உங்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதவர் ஆனால் எல்லா நேரத்திலும் தனது சொந்த வியாபாரத்தை சிறப்பாக கவனம் செய்கிறார்.
  • பணம் என்பது உங்கள் சுதந்திரத்திற்கான நம்பிக்கையாக இருந்தால் உங்களிடம் அது ஒருபோதும் இருக்காது இந்த உலகில் ஒரு மனிதனுக்கு இருக்கும் ஒரே உண்மையான பாதுகாப்பு அறிவு அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றின் இருப்பு மட்டுமே.
  • எண்ணில் உள்ள சிறந்ததை வெளிப்படுத்துபவர் எனது சிறந்த நண்பர்.

Related Post

 DHIRUBHAI AMBANI TAMIL QUOTES

BEST BOOKS

இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகளைப் படிக்கும்போது, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே உள்ள Button  மூலமும், comment மூலமும், வெளிப்படுத்தலாம் நன்றி.

What’s your Reaction?
+1
22
+1
35
+1
42
+1
3
+1
2
+1
0
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *